தினகரன் 17.08.2010
விப்’ உத்தரவு மீறல் தாண்டேலி நகராட்சி தலைவர் டிஸ்மிஸ்
பெங்களூர், ஆக. 17: நகரசபை தலைவர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரை கலெக்டர் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார்.
தாண்டேலி நகராட்சி தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மஜத சார்பில் யாரும் போட்டியிடக்கூடாது என்று கட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தலைவர் தேர்தலில் மஜத கவுன்சிலர் யூசுப்ரியாஸ் போட்டியிட்டார்.
அவருக்கு உதவியாக 2 உறுப்பினர்கள் பிற கட்சி கவுன்சிலர்களின் ஆதரவை கோரினர். தேர்தலில் யூசுப் ரியாஸ் வெற்றிபெற்றார்.
கட்சி ‘விப்’பை மீறிவிட்டதாக இவர்கள் மீது கட்சி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கட்சி மேலிடம் பச்சைக்கொடி காட்டியது. இதை தொடர்ந்து கார்வார் கலெக்டரிடம் மஜத கவுன்சிலர் ஆயிஷா புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரித்த கலெக்டர் அமரநாரா யணன் யூசுப் ரியாஸ் மற்றும் ஒரு மஜத கவுன்சிலரின் பதவியை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூர், ஆக. 17: நகரசபை தலைவர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரை கலெக்டர் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார்.
தாண்டேலி நகராட்சி தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மஜத சார்பில் யாரும் போட்டியிடக்கூடாது என்று கட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தலைவர் தேர்தலில் மஜத கவுன்சிலர் யூசுப்ரியாஸ் போட்டியிட்டார்.
அவருக்கு உதவியாக 2 உறுப்பினர்கள் பிற கட்சி கவுன்சிலர்களின் ஆதரவை கோரினர். தேர்தலில் யூசுப் ரியாஸ் வெற்றிபெற்றார்.
கட்சி ‘விப்’பை மீறிவிட்டதாக இவர்கள் மீது கட்சி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கட்சி மேலிடம் பச்சைக்கொடி காட்டியது. இதை தொடர்ந்து கார்வார் கலெக்டரிடம் மஜத கவுன்சிலர் ஆயிஷா புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரித்த கலெக்டர் அமரநாரா யணன் யூசுப் ரியாஸ் மற்றும் ஒரு மஜத கவுன்சிலரின் பதவியை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.