தினமலர் 25.06.2013
விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து
விழிப்புணர்வு பேரணி நடந்தது.சேர்மன் தனசேகரன் தலைமை வகித்தார். துணைச்
சேர்மன் பாலசுப்ரமணி, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொறியாளர் ராஜேந்திரன் வரவேற்றார். புத்தர் தெரு நகராட்சி உயர்நிலைப்
பள்ளி முன்பு துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று,
மீண்டும் பள்ளியை அடைந்தது. பள்ளி மாணவ, மாணவியர், நகராட்சி ஊழியர் உட்பட
பலர் பங்கேற்றனர்.