தினமலர் 25.01.2010
விழுப்புரம் நகரத்தில் திறன் மிகுந்த சி.எப்.எல்., தெரு மின் விளக்குகள்
விழுப்புரம் : விழுப்புரம் நகரத்தில் அதிக வெளிச்சமும், மின் சிக்கனம் அளிக்கும் சி.எப். எல்., தெருமின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது.
விழுப்புரம் நகரத்தில் குறைந்த மின் செலவில் அதிக வெளிச்சத்தை தரக் கூடிய சி.எல்.எப்., தெரு மின் விளக்குகள் பொருத் தும் பணிகள் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப் பட் டுள்ளது. இதற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் சி.எப். எல்., பல்புகள் வாங்கப்பட்டு நகராட்சி வார்டுகள் முழுவதும் பொருத்தப்பட்டு வருகிறது. குபேர வீதியில் இருந்த டியூப்லைட்டுகளை மாற்றி சி. எல்.எப்., பல்புகள் பொருத்தும் பணிகளை சேர்மன் ஜனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். நகராட்சி பொறியாளர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், ரகுபதி, சுரேஷ்பாபு, கம்பன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.