தினமலர் 25.11.2010
விழுப்புரம் நகராட்சி எல்லை விரிவாக்கம்
சென்னை : விழுப்புரம் நகராட்சியுடன் ஐந்து கிராம ஊராட்சிகளை இணைத்து, அதன் எல்லை விரிவாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக செயலர் அசோக் வரதன் ஷெட்டி பிறப்பித்த உத்தரவில், “விழுப்புரம் நகராட்சி எல்லையுடன் காகுப்பம், எருமனந்தாங்கல், பாணாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதற்கான வார்டுகள் பிரிப்பு, அடுத்த உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு செய்யப்படும். இந்த இணைப்புக்கு ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால், அவற்றை துறை செயலருக்கு ஆறு வாரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.