தினகரன் 02.04.2013
வி.கே.புரம் நகராட்சி கூட்டம்
வி.கே.புரம்: வி.கே.புரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவி மனோன்மணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கணேசபெருமாள், ஆணையர் அயூப்கான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகராட்சியில் புரோக்கர்களுக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை என உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். நகராட்சி தலைவி மனோன்மணியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த புகாரை ஆணையர் அயூப்கான் மறுத்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.