தினமணி 12.12.2009
வீட்டு வரி செலுத்த உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
புதுச்சேரி டிச. 11: வீட்டு வரியை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சியின் ஆணையர் ராஜமாணிக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழவர்கரை நகராட்சி புதிய முறை வீட்டு வரி மற்றும் சொத்துவரி விதிப்பைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக 2005-2006-ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வீட்டு வரி கேட்பு அறிக்கை அனைத்துவார்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கணினி மூலம் தட்டாஞ்சாவடி விவிபி நகரில் அமைந்துள்ள கணினி வீட்டு வரி வசூல் மையத்தில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இன்னுóம் பலர் வரி செலுத்தாமல் உள்ளனர். வீட்டு வரி சுய மதிப்பீட்டு அடிப்படையில் விதிக்கப்படுவதால் ஆரம்பத்தில் ஒருமுறை மட்டும் கேட்பறிக்கை வழங்கப்படும்.
2009-2010-ம் ஆண்டுக்கு வீட்டு வரி மற்றும் சொத்துவரியை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.