தினமணி 24.11.2010
வெங்காய மார்க்கெட்டையும் மாற்றவேண்டும்
மதுரை
, நவ.23: மதுரை கீழமாரட் வீதியில் செயல்பட்டுவரும் வெங்காய மார்க்கெட்டையும் நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என, மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஐ. சிலுவை வலியுறுத்தினார்.திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவர் பேசியதாவது
:மழைக் காலத்தில் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன
. இதுதொடர்பான “பேட்ஜ் வொர்க்‘கை மாநகராட்சி விரைவில் மேற்கொள்ள வேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. தற்போது மழைக் காலமாகவும் உள்ளது. எனவே, கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும்
, சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதால் நகரில் போக்குவரத்து ஓரளவு சீராக உள்ளது. அதேபோல் கீழமாரட் வீதியில் நெரிசலை ஏற்படுத்தும் வெங்காய மார்க்கெட்டையும் நகரின் வெளிப்பகுதிக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என
, மேயர் கோ. தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணைமேயர் மன்னன் ஆகியோர் தெரிவித்தனர்.கவுன்சிலர் சிலுவை மேலும் பேசுகையில்
, மாநகராட்சி விரிவாக்கத்துக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின் மாநகராட்சியில் எத்தனை வார்டுகள், மண்டலங்கள் ஏற்படுத்தத் திட்டம் உள்ளது எனக் கேட்டார்.கமிஷனர் பதில் அளிக்கையில்
, இதுதொடர்பாக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை வார்டுகள், மண்டலங்கள் என சர்வே எடுக்கப்பட்ட பின்னர்தான், இதுகுறித்து தெளிவாகத் தெரிவிக்க முடியும் என்றார்.மண்டலத் தலைவர் இசக்கிமுத்து
: நகருக்குள் அதிகளவு பன்றிகள் திரிகின்றன. இவற்றை ஒழிக்க அதன் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை செய்து பன்றிகளை வெளியேற்ற வேண்டும் என்றார்.மண்டலத் தலைவர் குருசாமி
: கிழக்கு மண்டலப் பகுதியில் 8 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் போதிய ஊழியர்கள் இல்லை. பாதுகாவலர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பள்ளிக்கூடங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ள நூலகத்தில் நூலகர் நியமிக்கப்படவேண்டும்.கீரைத்துறை
, காமராஜர்புரம் போன்ற பகுதிகளில் பன்றிகள் தொல்லை உள்ளன. இவற்றைப் பிடித்து காட்டுப் பகுதியில்விட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.