தினத்தந்தி 30.07.2013
வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகேயுள்ள பாட்டில்களை தரம் பிரிக்கும் நிறுவனங்களுக்கு ‘சீல்’
குப்பைக்கிடங்கு வெள்ளலூரில் உள்ளது. இங்கு சிலர் மருத்துவக்கழிவுகளை
கொட்டுவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து அங்கு கொட்டப்படும் கழிவுகளை
தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.
இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள்
நேற்று வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு சென்றனர். பின்னர் குப்பைக்கிடங்கை
சுற்றிலும் உள்ள பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு ஏராளமான பாட்டில்களை தரம்
பிரிக்கும் சிறிய நிறுவனங்கள் இயங்கி வருவதை கண்டுபிடித்தனர். உடனே
அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த நிறுவனங்கள் முறையான
அனுமதியில்லாமல் இயங்கி வருவதும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு
வருவதும் தெரியவந்தது. அதன்பேரில் அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல்
வைத்தனர்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் லதா
கூறும்போது, ‘வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகே மருந்து பாட்டில்களை தரம்
பிரித்து விற்பனை செய்யும் 9 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இது
அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்ததால் அந்த நிறுவனங்கள்
சீல்வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.