தினத்தந்தி 11.07.2013
வேலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
ஊர்வலம், விழிப்புணர்வு வாகனத்தை நேற்று கலெக்டர் சங்கர் கொடியசைத்து
தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு மேயர் கார்த்தியாயினி முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் தங்கள் கைகளில் மழைநீர்
சேகரிப்போம், மண் வளம் காப்போம், விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி,
மழைநீர் சேகரிப்போம், மண் அரிப்பை தடுப்போம், மழைநீர் சேகரிப்போம்,
நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை
வைத்திருந்தனர். அத்துடன் கோஷமும் போட்டுக்கொண்டு சென்றனர். துண்டு
பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று
பழைய மாநகராட்சி அலுவலகம் சென்று நிறைவடைந்தது.
யார்–யார்
அன்பு மற்றும் கவுன்சிலர்கள், என்ஜினீயர் தேவக்குமார், நகரமைப்பு அலுவலர்
கண்ணன், கட்டிட ஆய்வாளர் மதிவாணன், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார்,
லூர்துசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.