ஸ்ரீவிலி.யில் தெரு விளக்குகள் துவக்க விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், அசோக் நகரில் புதிதாக 15 தெரு விளக்குகளை இயக்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி. செந்தில்குமாரி உரையாற்றினார்.
விழா நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி. முத்துராஜ் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் சரோஜா வரவேற்றார். தெரு விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்து நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது:
மக்களுக்கு தொலை நோக்கான திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
1.85 லட்சம் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு இலவச அரிசி வழங்கி உணவு பாதுகாப்பு, 29 லட்சம் பேருக்கு ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கி சமூக பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
கிராம மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை தந்து வெண்மை புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் அசோக்நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் நிஜாம், நகர்மன்ற உறுப்பினர் இசக்கியம்மாள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.