ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காலியிடத்துக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காலியிடத்திற்கான தகுதி உத்தேச பதிவு மூப்பு பின்வருமாறு இருக்க வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், அதோடு விருப்பத்தோடு துப்புரவு மேற்கொள்ளும் பணிக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு 1.7.2012 அன்றைய நாளில் ஆதிதிராவிடர்- 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதரர்-18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி கட்டாயம் வயது தளர்வு உண்டு. உத்தேச பதிவுமூப்பு: ஆதிதிராவிடர்-31.12.2001 வரையிலும், ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-31.5.2006 வரையிலும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் நாளது தேதி வரையிலும், பகிரங்க போட்டியாளர்கள் 30.9.2008 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.
முன்னுரிமை உடையவர்கள்: அனைத்து பிரிவினரும் (ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ராணுவத்தில் பணிபுரிகின்றவர்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள்) உள்ளிட்டோர்.
மேற்குறிப்பிட்ட தகுதி மற்றும் பதிவு மூப்புடைய பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது. அதனால், வியாழக்கிழமை (மார்ச் 28) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.