தினகரன் 27.05.2010
ஸ்லோ நகர மேயராக இந்தியர் தேர்வு
லண்டன், மே 27: இங்கிலாந்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சீக்கியர் ஒருவர் லண்டன் மாநகராட்சிக்கு உட்பட ஸ்லோ நகர புதிய மேயராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்த ஜாக்ஜித் சிங் கிரீவல் (73) என்பவர் ஸ்லோ நகர புதிய மேயராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு, இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இந்தியர்கள், லண்டனில் உள்ள இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.