தினமணி 24.09.2009
ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் ஆய்வு
கள்ளக்குறிச்சி, செப். 23: சுகாதாரத் துறையினர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஹோட்டல்களில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல்களில் வட்டாட்சியர் ப.அன்பரசன் தலைமையில் நகராட்சி செயல் அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம், மருத்துவ அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தியாகதுருகத்தில் பேருராட்சி செயல் அலுவலர் பி.பழனி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.