தினகரன் 06.12.2010
ஏர்வாடி பேருராட்சியில் குடிநீர் தொட்டி, சாலை அமைக்க அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கீடு பணிகளை தரமாக நிறைவேற்ற வேண்டுகோள்ஏர்வாடி, டிச. 6: ஏர்வாடி பேருராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நபார்டு நிதி உதவி திட்டம் மூலம் (2009&10ல்) 51.50 லட்சமும், மேற்கு தொடர்ச்சி மலை அபிவி ருத்தி திட்டம் மூலம் 13 லட்சமும் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் பேரூ ராட்சி பகுதியில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் போடப்பட் டன.
இந்நிலையில் தற்போது ஏர்வாடி பேரூராட்சிக்கு சிறப்பு சாலை பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 59 லட்சம், இயக்கம் மற்றும் பராமரிப்பு குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்த நிதியின் மூலம் 2 லட்சம் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், 9வது தெருவி லிருந்து 6ம் தெருவிற்கும், ஈத்கா தெரு பஸ் திரும்பும் இடத்திலிருந்து திருவங்க னேரி வரையிலும் மற்றும் பல தெருக்களுக்கு தார் சாலைகள் அமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘நபார்டு நிதி உதவி திட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அபி விருத்தி திட்டத்தின் மூல மாக போடப்பட்ட தார் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே பழுதடைந்து விட்டன. எனவே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் தனர்.
இதுபற்றி பஞ்சாயத்து நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, ‘சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு குறைந்தது ஒரு வார காலத்திற்கு தண் ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். இந்த கால கட் டத்தில் சாலையில் வாக னங்கள் எதுவும் செல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பொதுமக்களில் சிலர் சாலைப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதன் காரணமாகவே சாலைகள் விரைவில் பழுதடைய நேரிட்டது’ என்றனர்.