தினமணி 18.06.2013
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 பகுதியில் ரூ. 1.36 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வார்டு 18-ல் எஸ்.எஸ். காலனி சுப்பிரமணியப்பிள்ளை தெருவில் ரூ. 40.50
லட்சத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் தார்ச்சாலை, வார்டு 19-ல்
பொன்மேனி முதல் தானதவம் வரை ரூ. 53 லட்சத்தில் தார்ச்சாலை, வார்டு 1-ல்
பூமன் நகரில் ரூ. 11.75 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று
வருகிறது.
எல்லீஸ் நகர் புறவழிச் சாலையில் சர்வீஸ் சாலையில் ரூ. 30.80 லட்சத்தில
பிக் பஜார் முதல் எல்லீஸ் நகர் சந்திப்பு வரை தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த ஆணையர் ஆர். நந்தகோபால், பணிகளை
விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மண்டலம் 1- பகுதியில் வரி சீராய்வு செய்வது தொடர்பாக, வணிக நிறுவனங்களை
அளவிடும் பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார். வரி சீராய்வு செய்யப்பட்ட
பின்னர், குழு அமைத்து வரி சரியாக விதிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்பட
இருப்பதால், முறையாக அளவிடும் பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவர்
கேட்டுக் கொண்டார்.
உதவி ஆணையர் ரெகோபெயாம், செயற்பொறியாளர் அரசு, உதவி செயற்பொறியாளர்
காமராஜ், பொறியாளர்கள் மயிலேறிநாதன், சர்புதீன், கந்தப்பன் உள்ளிட்ட
அலுவலர்கள் பங்கேற்றனர்.