தினமணி 01.04.2010
ரூ.1 கோடியில் எரிவாயு தகனமேடை
விழுப்புரம், மார்ச் 31: விழுப்புரம் நகரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடையை நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் சோ. பாலசுப்ரமணியம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
÷நகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து இந்த தகனமேடையை அமைத்து வருகிறது. இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை ஆய்வு செய்து, பணியை விரைவுபடுத்தவும் கேட்டுக் கொண்டனர்.
÷இந்த ஆய்வின்போது, ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்தீபன், உதவி பொறியாளர் லலிதா, பணி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ரோட்டரி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.