தினமணி 08.04.2010
காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் நீச்சல் குளம்
காஞ்சிபுரம், ஏப். 7: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திடலில் ரூ.1 கோடி செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளை அழகுபடுத்தும் திட்டத்தில் தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந் நிதியைக் கொண்டு சாலை அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், குளங்களை தூர்வாருதல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட விளையாட்டு திடலில் ரூ.1 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந் நீச்சல் குளத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா அடிக்கல் நாட்டினார்.
பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.