தினமலர் 25.05.2010
மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரையில் ஜூன் 1 ல் துவக்கம்
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது.மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு வரும் போது படிவங்களை பூர்த்தி செய்ய குடும்பத்தலைவர் பெயர், குடும்பத்தில் உள்ள ஆண், பெண், மொத்த நபர்கள் எண்ணிக்கை, வீட்டின் கட்டுமானப் பொருள், குடிநீர்,ரோடு, கழிப்பிட வசதி, வீட்டிலுள்ள ரேடியோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன், கம்ப்யூட்டர், மொபைல்போன் விவரங்களை தர வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் இடம் பெற குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்கள் பெயர், ஒவ்வொரு நபரின் பிறந்ததேதி, திருமணநிலை, தொழில்/நடவடிக்கை, தந்தை, தாய், துணைவர் பெயர், பிறந்த ஊர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரியை தனியாக காகிதத்தில் எழுதி வைத்திருக்க வேண்டும். அலுவலர்களிடம் விவரங்களை உடனடியாக கொடுத்தால், தாமதத்தை தவிர்க்கலாம். மேலும் 1800 3450 111 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.