தினமலர் 21.06.2010
வீடு கட்ட ரூ.1 லட்சம் கடன் நகராட்சி சேர்மன் தகவல்
திருச்செங்கோடு: “வீடு கட்ட வசதியில்லாத நகர்புற மக்களுக்கு ஹட்கோ மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்‘ என, நகராட்சி சேர்மன் நடேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: வீடு கட்ட வசதியில்லாத ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட ஹட்கோ நிறுவனம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஐந்து சதவீத வட்டி சலுகை வழங்கப்படுகிறது. இந்த கடனுதவியை பெற விரும்புவோர் நிலத்தின் பட்டா நகலுடன் நகராட்சிக்கு விண்ணப்பம் செய்யலாம். தகுதியுள்ள மனுக்களுக்கு கடனுதவி வழங்க நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்யும். இதை சம்மந்தப்பட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.