தினமணி 30.07.2010
தத்தனேரி மின் மயானத்தில் எரியூட்டும் பணி ஆக. 1 முதல் நிறுத்தம்மதுரை
, ஜூலை 29: பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் ஆகஸ்ட் 1 முதல் சடலங்கள் எரியூட்டும் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.இது குறித்து
, அவர் தெரிவித்துள்ளதாவது:மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட தத்தனேரி மின் மயானத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சடலங்கள் எரியூட்டும் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவுற்ற பின்னர், வழக்கம்போல் சடலங்கள் எரியூட்டும் பணி நடைபெறும். இப்பணி முடியும் வரை, மூலக்கரையில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டலாம் எனத் தெரிவித்துள்ளார்.