ரூ. 1 கோடியில் கான்கிரீட் சாலைப்பணி துவங்கியது
கோவை, டிச. 16: கோவை குனியமுத்தூர் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைப்பணி துவங்கியது.
கோவை குனியமுத்தூர் நகராட்சி 3, 4, 5, 6, 7 ஆகிய ஐந்து வார்டுகளுக்கு உட்பட்ட நிர்மல்மாதா மெட்ரிக் பள்ளிச்சாலை, சன் கார்டன், மதுரை வீரன் கோயில் தெரு, விபி சி நகர், பிரவின் கல்யாண மண்டபம் ரோடு, பெரு மாள் கோயில் வீதி, சக்தி குறுக்குத்தெரு, ஸ்ரீராம் காலனி, கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை மற்றும் பணி துவக்கவிழா நிர்மல்மாதா மெட்ரிக் பள்ளி சாலையில் நேற்று காலை நடந்தது.
நகராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் துளசி மணி செல்வராஜ் சாலைப்பணியை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கே.பி.செல்வராஜ், நகராட்சி பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன், பொறியாளர் அமல்ராஜ், சுகாதார பிரிவு அலுவலர் சிவக்குமார், 3வது வார்டு கவுன்சிலர் சுஜாதா குனி சை செல்வம், குடியி ருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ராமசாமி, அண்ணாத் துரை, நடராஜன், ரவி, மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.