தினமணி 02.04.2013
அம்மா உணவகம்: தினமும் 1 லட்சம் இட்லிகள் விற்பனை
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகம் மூலம் தினமும் ஒரு லட்சம் இட்லிகள் விற்பனை செய்யப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த நகராட்சி நிர்வாகம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:-
அடித்தட்டு மக்களின் நலனுக்காக கடந்த மார்ச் 19-ம் தேதி சென்னையில் மலிவு விலை அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இங்கு ரூ.1-க்கு இட்லி, ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது.
இதுவரை 73 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 127 உணவகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த உணவகங்கள் மூலம் தினமும் சராசரியாக ஒரு லட்சம் இட்லிகள், 25 ஆயிரம் சாம்பார் சாதம், 15 ஆயிரம் தயிர் சாதம் விற்பனைசெய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.