தினமணி 20.04.2013
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 1-வார்டு மணலி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறு மின் விசை குடிநீர் தொட்டியை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி திறந்து வைத்தார்.
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 1-வார்டு மணலி சந்திப்பில் ரூ.1.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறு மின் விசை குடிநீர் தொட்டியை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மேத்யூ ஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்ன பெர்லி, துணைத் தலைவர் பீர்முகமது, வார்டு உறுப்பினர்கள் ஜானி, ஸ்ரீஜாராணி மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.