தினத்தந்தி 29.05.2013
சென்னையில் 1–ந்தேதி முதல் பொருளாதார கணக்கெடுப்பு தொடக்கம் மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூன் 1–ந்தேதி (சனிக்கிழமை) முதல் 6–வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கான விவரங்களை சேகரிக்க களப்பணியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வருவார்கள்.
இதில் கணக்கெடுக்கப்படும் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கும், திட்ட செயலாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுவதால், களப்பணியாளர்களிடம் பொதுமக்கள் சரியான விவரங்களை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.