தினத்தந்தி 26.09.2013
சென்னை மாநகராட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
பட்டியல் 1–ந்தேதி வெளியீடு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும்
சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2014–ம்
ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 7, 8,
9, 10 மற்றும் 13–ம் மண்டல அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி
கட்டிடங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் அக்டோபர்
1–ந்தேதி வெளியிடப்படுகிறது.

வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வரைவு
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்று சரிபார்த்துக் கொள்வதுடன்,
பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் செய்ய வேண்டியவர்கள் உரிய
படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய ஆவண நகல்களுடன் அக்டோபர் 1–ந்தேதி முதல்
31–ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மேலும்,
அக்டோபர் 6, 20, 27–ந்தேதிகளில் (ஞாயிற்றுகிழமைகளில்)
வாக்குச்சாவடிகளிலும் இந்த பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட
உள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.