தினமணி 11.02.2014
ரூ.1 கோடி நிலம் மீட்பு
கோவையில் தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் எரு கம்பெனி பகுதியில்
மாநகராட்சிக்குச் சொந்தமான 1250 சதுர அடி இடத்தை தனியார் கார் நிறுவனம்
ஆக்கிரமித்திருந்தது. இந்த இடத்தில் கட்டடமும் கட்டப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கார்
நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்பு
அகற்றப்படவில்லை.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் க.லதாவின் உத்தரவின் பேரில் நகரமைப்பு
அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்தனர். இந்த
இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.