தினத்தந்தி 12.02.2014
கோபியில் ரூ.1 கோடி செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள்
கோபிசெட்டிபாளையம்
செங்கோட்டையன் காலனியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய புதிய
மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக ஒருங்கிணைந்த நகர்புற
வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கோபி –சத்திரோட்டில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக
ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா
நடந்தது. விழாவுக்கு கோபி நகராட்சி தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு
பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் காளியப்பன், நகராட்சி
பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.