தினமலர் 23.09.2010
குடிநீர் திட்டப்பணிகள்: டிச.,10ல் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
விருதுநகர் : மாவட்டத்தில் குடி நீர் சப்ளை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வி.கே.சண்முகம், மாவட்ட ஊராட்சித்தலைவர் கடற்கரை ராஜ், குடிநீர் வாரிய அதிகாரிகள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய சேர்மன்கள், கமிஷனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மழை இல்லாததால் தாமிரபரணி குடிநீர் மட்டுமே விருதுநகருக்கு கிடைத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. விருதுநகரில் குடி நீர் சப்ளை 86 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதை 10 மண்டலங்களாக குறைத்தால் தண்ணீர் “பிரஷர்‘ அதிகரித்து கூடுதல் சப்ளை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: ரூ.594 கோடி செலவில் மூன்று கூட்டு குடி நீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை டிச.,10ல், ஆலங்குளம் சமத்துவபுரம் திறப்பு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார், என்றார்.