தினமலர் 23.08.2012
நகர்புறங்களில் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் அதிகரிப்பு
புதுடில்லி : இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில், நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த, 2001 ம் ஆண்டு நகரங்களில் 27.8 சதவீதமாக இருந்த மக்கள் தொகை, 2011ம் ஆண்டு 31.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சவுகதா ராய், சில நாடுகளில், நகர்ப்புற மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விளக்கினார். இதன்படி, “”பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில், 33.1 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள் தொகை, 36.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில், 23.6 லிருந்து 28.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அண்டை நாடான இலங்கையில் மட்டும், 15.7 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக குறைந்துள்ளது,”இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.