தினமணி 05.04.2013
ஏப்.10 ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இம்மாதம் 10 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறுத்தப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திவிபரம்: காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தலைமை இடத்தில் மின்தடை மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நீரேற்றம் நிறுத்தப்படவுள்ளது. ஆகையால் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இம்மாதம் 10 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காவிரி ஆற்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.