தேவகோட்டை நகராட்சி கூட்டுறவு சங்கத் தேர்தலில் 10 பேர் வெற்ற
தேவகோட்டை நகராட்சி மற்றும் அனைத்து தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு நாணய சங்கத் தேர்தலில் நகராட்சி சார்பாகப் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர்.
இதில் நகராட்சி மற்றும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒரு அணியாகவும், ஆசிரியர்களை மட்டும் உள்ளடக்கிய குழுவினர் ஓர் அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை ஆறாவது தொகுதி பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆசிரியர் ராமராஜ் 69 வாக்குகளும், வேலுச்சாமி 63 வாக்குகளும், சுரேஷ்குமார் 61 வாக்குகளும், ஆசிரியை வணக்கம் 60 வாக்குகளும், செல்வக்குமார் 59 வாக்குகளும், ராமகிருஷ்ணன் 58 வாக்குகளும், ஆசிரியை அன்புக்கரசி 60 வாக்குகளும், ஆசிரியை விமலா 59 வாக்குகளும், ஆசிரியை ராணி 57 வாக்குகளும், சண்முகவேல் 65 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றனர்.