தினமணி 21.05.2013
கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள்
கோவை மாநகராட்சிப் பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் மே மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளன.
இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சிப் பகுதியில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, பிற மாநகராட்சிப் பகுதிகளிலும் இவற்றைத் திறக்க உத்தரவிடப்பட்டது.
கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் மேயர் செ.ம. வேலுசாமி ஆலோசனையின் பேரில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான சமையல் பொருள்களை வாங்கவும், மகளிர் குழுவினரைத் தேர்வு செய்யவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.