தினகரன் 19.08.2010
கட்டிட விபத்து பலி 10 ஆனது தானேயில் அபாயகரமான நிலையில் 800 கட்டிடங்கள்
தானே, ஆக. 19: தானேயில் இடிந்து விழும் அபாயகர மான நிலையில் 800 கட்டிடங்கள் இருப்பதாகவும் இந்த கட்டிடங்களில் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருவ தாகவும் தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தானே மாவட்டம் கல்வாவில் நேற்று முன்தினம் மாலை சோனி புவன் என்ற 40 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண் ணிக்கை 10 ஆக அதிகரித் துள்ளது.
இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த நாக் ராஜ் ராய்கர், ராஜேந்திர ராய்கர், ரகுநாத் ராய்கர், விமல் ராய்கர், கிரண் ராய்கர் ஆகிய 5 பேர் மற்றும் மனுநாத் பண்டாரி, மவுசமி சாஜன், வி.ஜி.ஷேக், சதீஷ் குருமாதா, குலாப் கேணி என அடையாளம் காணப் பட்டுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் ஏதும் இல்லாததால் அந்த பகுதி யிலேயே தெருவோரத்தில் கூடாரம் அமைத்து தங்கியி ருக்கிறார்கள்.
மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு இதுவரை எந்த உதவியையும் செய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் இடிபாடு களை அகற்றும் பணி நடந்தது.
இந்த நிலையில், தானே யில் 800 கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாக தானே மாந கராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் பி.ஜி. பவார் நேற்று கூறுகையில், “அபாயகரமான நிலையில் மொத்தம் 800 கட்டிடங்கள் இருப்பதாக கண்டறிந்திருக் கிறோம். இந்த கட்டிடங்கள் மக்கள் வசிக்க லாயக்கான வையா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இந்த கட்டிடங் களில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர்” என்றார்.
தானே மாநகராட்சிக்குட் பட்ட பகுதியில் கல்வா, மும்ப்ரா ஆகியவை வருகின்றன. இந்த இரண்டு பகுதிகளில் மட்டும் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில்தான் அபாயகரமான கட்டிடங்கள் அதிகளவில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அபாயகரமானவை என கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மக்கள் வசிக்கும் அளவுக்கு பலமானவையா என்பதை பரிசோதித்து அறிய பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.