தினகரன் 09.10.2013
உடுமலை பகுதியில் ரூ10 கோடியில் தார்சாலைகள்
உடுமலை, : உடுமலை பகுதியில் பல்வேறு ரோடுகள் தார்சாலையாக மாற்றப்படுகிறது. குறிச்சிக்கோட்டையில் இருந்து குமரலிங்கம் ரோடு வரை 8 கி.மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது. கொழுமத்தில் இருந்து கல்லாபுரம் ரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் 600 மீட்டரில் தார்சாலை அமைக்கப்படுகிறது கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. கொழுமத்தில் இருந்து பழனி ரோடு செக்போஸ்ட் வரை தார்சாலை அமைக்கப்படுகிறது. உடுமலை-தாராபுரம் ரோட்டில் 2 கி.மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது. உடுமலை-பல்லடம் ரோடு பூளவாடி பிரிவில் இருந்து பூளவாடி வரை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் ரூ.10 கோடியில் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான நிதியை அரசு ஒதுக்கி உள்ளது.