தினமணி 16.02.2010
போடி நகராட்சியில் 100 சதவீத சொத்து வரி வசூல்
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை மூலம் நகராட்சிக்கு வருமானம் வருகிறது. இந்த வருமானத்தால் நகராட்சி துப்புரவு பணிகள் மற்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தற்போது போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, நகரை சுத்தமாக வைத்து உள்ளனர். பொது மக்களின் குறைகள் உடனடி யாக தீர்வு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை ஆர்வமாக நகராட்சியில் செலுத்தி வருகிறார்கள். நகராட்சியில் வரி வசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது என்று நகராட்சி தலைவர் ரதியாபானு, துணைத்தலைவர் சங்கர், நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.