தினகரன் 14.10.2010
காந்திபுரத்தில் ரூ100 கோடியில் புதிய மேம்பாலம் பணி ஜனவரியில் துவக்கம் பஸ் நிலைய போக்குவரத்தில் மாற்றம்கோவை, அக். 14: காந்திபுரத் தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி, வரும் ஜனவரியில் துவக்கப்படும். பஸ் ஸ்டா ண்ட்டுகளுக்கான போக்குவரத்து மாற்றப்படும்.
காந்திபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய மேம் பாலம் கட்டும் பணி நடத்தப்படவுள்ளது. தற்போது விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் பணி முடியும். இதைதொடர்ந்து டெண்டர் விட்டு, பணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி முதல் வாரத்தில் பணியை துவக்க மாநில நெடுஞ்சாலைத்துறை ஆயத்தமாகி வருகிறது. நகரின் போக்குவரத்து நெரிசல் மிகு ந்த மையப்பகுதியில் மேம் பாலம் கட்டுவது மிகவும் சவாலான விஷயம்.
நடைபாதை வேலை நடந்தாலே, கோவை நகரின் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க, நெரிசல் இன்றி மேம்பால பணி நடத்த நெடுஞ்சாலைத்துறை ஆலோசித்து வருகிறது.
இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதி காரி ஒருவர் கூறியதாவது;
காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், டவுன்பஸ் ஸ்டா ண்ட், விரைவு பஸ் ஸ்டாண்ட் (திருவள்ளுவர் பஸ் ஸ்டா ண்ட்), ஆம்னி பஸ் ஸ்டாண்ட் என 4 பஸ் ஸ்டாண்ட் ஒரு கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ளது.1500 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக மேம்பாலம் அமை யும். மேம்பாலம் கட்டினால், இப்பகுதிக்கு குறிப்பாக, பஸ் ஸ்டாண்டிற்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு என நகரின் மிகப்பெரிய வர்த்தக, வணிக பகுதி க்கு பொதுமக்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, வாகனங்கள் சென்று வர மாற்று திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரோட்டின் ஒரு பகுதியை பாலம் கட்டும் பணிக்கும், இதர பகுதியை வாகன போக்குவரத்திற்கும் பயன்படுத்த ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.
ரோட்டின் இரு பகுதியை மேலும் அகலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள ரோட்டின் அளவிற்கு, வாகனங்கள் செல்ல பாதை அமைக்கப்படும். இதன் மூலம் பஸ் ஸ்டாண்டிற்கு நெரிசல் இல்லாமல் பஸ்கள் செல்ல முடியும்.
பெங்களூரு மைய பகுதி மேம்பாலம், சென்னை கத்திப்பாரா மேம்பாலம் ஆகிய வை கூட போக்குவரத்து நெரி சல் மிகுந்த இடத்தில் தான் கட்டப்பட்டது. இதேபோல், காந்திபுரம் மேம்பாலத்தை நெரிசலை சமாளித்து கட்ட திட்டம் வகுக்கப்பட்டு வரு கிறது. பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல மாற்றுப்பாதை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். பணி துவங்கி 2 ஆண்டிற்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.