100 சதவீத வரி வசூலித்து சத்தி நகராட்சி சாதனை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சியில் 2012-13 ம் ஆண்டிற்கான வரி வசூல் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக 100 சதவீதம் வசூலிக்கப்பட்டது. இச்சாதனையைச் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆணையாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். ரூ.3.14 கோடி வரி வசூல் செய்த மேலாளர் பிரான்சிஸ்சேவியர், வருவாய் ஆய்வாளர் நாகராஜ், வருவாய் உதவியாளர்கள் கணேசன், சந்திரன், ஆரிப்வுல்லா, பிரகாஷ், ஆயிஷா, முருகேசன், சுந்தரம் ஆகியோருக்கு நகராட்சித்தலைவர் பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத வரிவசூலுக்கு ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.