தினமணி 03.06.2013
ஆரணி நகராட்சி உயர்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆரணி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி கடந்த ஆண்டுதான் தரம் உயர்த்தப்பட்டது. முதல் முறையாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
எஸ்.பாரதி 440 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ஜி.கெüசல்யா 394 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், என்.ப்ரீத்தா 383 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர்.
இவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.ரத்தினகுமார், தலைமையாசிரியர் ப.பிரேமா, உதவித் தலைமையாசிரியர் எஸ்.ராஜா ஆகியோர் பாராட்டினர்.