தினத்தந்தி 04.10.2013
திருவேற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவு கொண்ட
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களை உபயோகிக்கக் கூடாது. இருக்கும்
பிளாஸ்டிக் பொருட்களை விற்று முடித்து விட வேண்டும் என்று கடந்த சில
மாதங்களுக்கு முன்பு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களை உபயோகிக்கக் கூடாது. இருக்கும்
பிளாஸ்டிக் பொருட்களை விற்று முடித்து விட வேண்டும் என்று கடந்த சில
மாதங்களுக்கு முன்பு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
கால அவகாசம் முடிவடைந்தநிலையில் நேற்று திருவேற்காடு நகராட்சிக்கு
உட்பட்ட 9–வது வார்டில் உள்ள கடைகள், ஓட்டல்களில் உள்ள பிளாஸ்டிக்
பொருட்களை பறிமுதல் செய்யும் பணி நகராட்சி கமிஷனர் சங்கர்(பொறுப்பு)
தலைமையில் நடைபெற்றது.
அப்போது நகரமன்றத்தலைவர் மகேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள்
அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்
செய்தனர்.