தினமலர் 12.08.2012
சுகாதாரமற்ற குடிநீர்: 100 “கேன்கள்’ பறிமுதல்
சென்னை : திருவொற்றியூரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 100 “கேன்கள்’
பறிமுதல் செய்யப்பட்டன.திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்ற “கேன்களில்’ குடி நீர் தரப்படுவதாக புகார் வந்தது.சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அருள்தாஸ் ற்றும் ஊழியர்கள், திருவொற்றி யூர் சுங்கச்சாவடி முதல் எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கடைகள் மற்றும் குடி நீர் “கேன்கள்’ ஏற்றப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.அதில், அழுக்குப் படிந்து மோசமான நிலையில் இருந்த 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட “கேன்கள்’ மூலம் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, திருவொற்றியூர் காலடிப்பேட்டை, தேரடி மற்றும் விம்கோ நகரில் 100 “கேன்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன.