கோவை மாநகராட்சியில் குடிநீர், சொத்து வரி ரூ.102.23 கோடி வசூல்
கோவை:கோவை மாநகராட்சிக்கு 2012&13 இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்க செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி முதலிய அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகைகளை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையம் தினசரி மாலை 5 மணி வரை செயல்படுகின்றன.
வரும் 24 மற்றும் 31 ம் தேதி ஞாயிற்று கிழமையும் அனைத்து வரி வசூல் மையமும் வழக்கம் போல செயல்படும். குறிச்சி மற்றும் கோவைப்புதூர் பகுதிகளில் உள்ள பொது மக்கள் வரி செலுத்த ஏதுவாக பழைய குறிச்சி நகராட்சி அலுவலகத்திலும், கோவைப்புதூரில் நாகபிள்ளையார் கோவில் அருகில் உள்ள புதிய நூலக கட்டிடத்திலும் இரண்டு வரி வசூல் மையம் திறக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 2.52 லட்சம் குடிநீர் இணைப்பு உள்ளன. இதன் மூலம் ரூ.25.82 லட்சம் வசூல் ஆக வேண்டியதில், ரூ 17.83 கோடி வசூலாகி உள்ளது. மீதி ரூ.7.98 கோடி வசூலாக வேண்டியுள்ளது. 69 சதவிகிதம் குடிநீர் வரி வசூலாகி உள்ளது.கோவை மாநகராட்சியில் ரூ.84.40 கோடி வரி வசூலாகி உள்ளது. மீதி ரூ 19.25 கோடி வசூலாக வேண்டியுள்ளது. 81 சதவிகித வரி வசூலாகி உள்ளது. குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி மூலம் மொத்தம் ரூ.102 கோடியே 23 லட்சம் வசூலாகி உள்ளது.