மாலை மலர் 28.07.2010
சென்னையில் கொசு ஒழிப்புப்பணியில்
1050 தொழிலாளர்கள்
110
கி.மீ. நீளம் உள்ள நீர்வழிப்பாதைகளில் 9 கட்டு மரங்கள், 6 பைபர் படகுகள் மூலம் கொசுப்புழுக் கொல்லை மருந்து நாள் தோறும் தெளிக்கப்பட்டு, கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு வருகிறது. 800 கி.மீ. மழைநீர் வடிகால் வாய்களில் மூடிகளை திறந்து, கொசுப்புழுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.பகல் நேரங்களில் மழை நீர் வடிகால்வாய்களில் உள்ள கொசுக்களை அழிக்க சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
. வீடுகள்தோறும் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் சென்று மேல்நிலைத்தொட்டி, கீழ் நிலைத்தொட்டி, கிணறு ஆகியவற்றில் கொசுப் புழுக்கொல்லி மருந்து போடப்படுகிறது.மேலும்
, கொசு உற்பத்தியை தடுக்க மழைநீர் தேங்கியுள்ள உபயோகமற்ற பொருட்களான பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூந்தொட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன.கொசுக்களை ஒழிக்க மாலை நேரங்களில் வாகனங்களில் பொருத்தப்பட்ட
20 பெரிய புகைபரப்பும் இயந்திரங்களும், ஆட்டோவில் பொருத்தப்பட்ட 10 புகைபரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொசு ஒழிக்கும் பணியில்
1050 மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசுப்புழு மற்றும் கொசு தடுக்கும் பணிகளுக்காக 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகைபரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு நாள்தோறும் கொசு ஒழிப்பு பணியினை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள மழைநீர் தேங்கும் உபயோக மற்ற பொருட்களை உடனடியாக அகற்றி
, ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.