தினகரன் 02.09.2010
அறந்தாங்கியில் 109 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவிஅறந்தாங்கி, செப். 2: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 109 பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 109 பெண்களுக்கு தலா ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் காசோலையை நகராட்சி தலைவர் மாரியப்பன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அறந்தாங்கி சுகாதார ஆய்வாளர் சங்கரசபாபதி, மேலாளர் ரவிசந்திரன், எழுத்தர் சுப்பிரமணி, நகராட்சி உறுப்பினர்கள் சுமதிசங்கர், கைலாசம், ராஜம்மாள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அறந்தாங்கி நகராட்சிக்கு உள்பட 684 பயனாளிக்கு ரூ.32 லட்சம் மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.