தினகரன் 28.10.2010
நகரில் சுற்றிய 11 மாடு சிக்கியது
கோவை, அக்.28: கோவை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிய 11 மாடு களை மாநகராட்சியினர் நேற்று பிடித்தனர்.
கோவை தியாகி குமரன் வீதி, வைசியாள் வீதி, ஒப்பண கார வீதி, பெரியகடை வீதி, என்.எச்.ரோடு உள்ளிட்ட பகுதி யில் மாடுகள் சுற்றிதிரிவதாக புகார் வந்தது. குறிப்பாக மார்க் கெட், குப்பை மேடுகளில் மாடுகள் மேய்கின்றன.
ரோட்டில் மாடுகளின் நட மாட்டம் அதிகமாகி விட்ட தால் போக்குவரத்து இடை யூறு ஏற்படுகிறது.அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி தலைமையில் மாநகராட்சி தொழிலாளர்கள், தியாகி குமரன் வீதி, வைசியாள் வீதி, ஒப்பணகார வீதியில் நேற்று 2 மணி நேரத்தில் 11 மாடுகளை பிடித்தனர்.
10 மாடுகளுக்கு தலாஆயிரம், ஒரு மாட்டு கன் றுக்கு 500 ரூபாய் என 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பூங்கா இயக்குநர் பெருமாள் சாமி கூறுகையில், ” மாடுகளை கட்டி வைத்து வளர்க்கவேண் டும். நகரில் நட மாட விட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாயிபாபாகா லனி உள்ளிட்ட பகுதியில் குதிரைகள் அதிக மாக சுற்றுகின்றன. இவற்றையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 3 குதிரைகளை பிடித்து அபராதம் விதித்திருக்கிறோம், ” என்றார்.