தொட்டியம் பேரூராட்சியில் ரூ11 லட்சத்தில் குடிநீர் பணி அதிகாரி ஆய்வு
தொட்டியம்: தொட்டியம் பேரூராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
தொட்டியம் பேரூராட்சியில் வாணப்பட்டறை, மதுரை காளியம்மன் கோயில், திருச்சி- சேலம் மெயின்ரோடு, வடகரை உள்ளிட்ட 10 இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்து இடங்களில் ஆழ்குழாய் கிணறும், 5 இடங்களில் மினிடேங்க் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ரூ.11 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மார்க்கரேட் சுசீலா, உதவி செயற்பொறியாளர் பாலகங்காதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தொட்டியம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் சித்ரா ஆகியோர் உடன் சென்றனர்.
முன்மாதிரியாக அமைக்கப்படுகிறது.