தினமலர் 09.04.2010
1.100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு: மேயர் அறிவிப்பு
சென்னை:பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள், ‘சென்னை பள்ளிகள்‘ என பெயர் மாற்றம் செய் யப்படும் என்று மேயர் சுப்ரமணியன், பட்ஜெட்டில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்று ரிப்பன் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘சென்னை பள்ளிகள்‘ என்ற பெயர் பலகைகளை மேயர் திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் மற்ற துறைகளை விட கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் சிறந்து விளங் குகின்றன. கல்வித் துறை சிறந்து விளங்க முக்கிய காரணம் ஆசிரியர்கள் தான்.மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முன்கூட்டியே துவங்கப்படும் என அறிவித்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் சேர்க்கை துவங்கியது.
ஒரு வார காலத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1,500 மாணவ, மாணவியர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.காலம், காலமாக இருந்து வரும் சூழ்நிலைகளால், ‘கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிக்கிறான்‘ என சொல் வதற்கு பெற்றோர் அச்சப்படும் நிலை உள்ளது. அதை தவிர்க்கவும், கல்வித் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளின் பெயர்கள், சென்னை பள்ளிகள்‘ என மாற்றப்படும்.
மாநகராட்சியின் மழலையர் பள்ளி முதல், மேல்நிலைப்பள்ளி வரை உள்ள 312 பள்ளிகளும், ‘சென்னை பள்ளிகள்‘ என்றே இனி அழைக் கப்படும். பத்து நாட்களில், படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே அளவிலான பெயர் பலகைகள் மாட்டப் படும். கடந்த ஆண்டில், 800 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களில் 528 சிறுவர், சிறுமியர், மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
மாநகராட்சி இரவு காப்பகத்தில் தங்கியிருக்கும் நான்கு சிறுவர்கள், மாநகராட்சி பள்ளி யில் சேர்க்கப்பட உள்ளனர்.சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் வளர்ச்சியை விவரிக்கும் வகையில், சின்னமலை பள்ளியில் இரண்டு நாள் கண்காட்சி நடத்தப்பட் டது. இதை 5,237 பொதுமக்கள் பார்வையிட்டனர். அதுபோல், வடசென்னை சர்மாநகர் பள்ளியில் வரும் 26ம் தேதி, கல்விக் கண்காட்சி துவங்கப் படும்.கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி களில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 81 சதவீதமும் தேர்ச்சி விகிதம் இருந்தது.
இதை மேலும் அதிகப்படுத்த ஊக்குவிக்கும் வகையில், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான அன்றே, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து இந்த ரொக்கப் பரிசு வழங்கப்படும். அதை, பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு மேயர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர.