தினமணி 12.11.2009
கமுதியில் ரூ.11.75 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணி
கமுதி, நவ. 11: கமுதி பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் ரூ. 11.75 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் (திருமண மண்டபம்) கட்டும் பணி துவங்கியது (படம்).
2009-2010-ம் ஆண்டுக்குரிய அனைத்து பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெற்று இப் பணி துவங்கி உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எம்.எம்.அம்பலம், செயல் அலுவலர் பி.முனியாண்டி, ராமநாதபுரம் மாவட்ட பேரூராட்சிகள் உதவிப் பொறியாளர் பாண்டியம்மாள் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பணி குறித்து தலைவர் அம்பலம் கூறியது: கடந்த ஜனவரி மாதமே இப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பே இப் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்படும் சமுதாயக்கூடம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும். விரைவில் கட்டுமானப் பணி முடிவடையும் என்றார்.