தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க ரூ1.18 கோடி செலவில் 5 புதிய ஜெனரேட்டர்கள் 24 மணி நேர கட்டுப்பாட்டறை துவக்கம்
திருச்சி: மாநகராட்சி யில் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.1.18 கோடியில் 5 புதிய ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளதாக மேயர் ஜெயா தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி யின் ரூ.3.59 கோடி மதிப் பில் நடைபெறும் வறட்சி நிவாரண பணிகள், குடிநீர் திட்டப்பணி முன்னேற்றம் குறித்து மேயர் ஜெயா தலைமையில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற¢று நடந்தது.
இக்கூட்டத்தில் மேயர் பேசியது: கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் தர ரூ.3.59 கோடி அரசு வழங்கியுள்ளது.
மாநகராட்சியின் பல்வேறுபகுதிகளில் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் கை பம்பு கள் பொருத்தும் பணிகளும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள 50 இடங்க ளில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் வைக்கப்படும். லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். மின்தட்டு பாடு ஏற்படும் நேரங்களில் தடையின்றி குடிநீர் தர 5 புதிய ஜெனரேட்டர்கள் ரூ. 1.18 கோடியில் வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது.
மாநகரில் மாநகராட்சியின் 11 லாரிகள் மூலமும் 4 வாடகை லாரிகள் மூல மும் குடிநீர் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வறட்சியான காலத்தில் 4 வாடகை லாரிகள் மூலமும் குடிநீர் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுபாடின்றி ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர்தர ஒவ்வொரு கோட்டத்துக்கும் 3 லாரி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசுகையில், மாநகராட்சி பகுதியில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் கண்காணிக்க மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றில் 24 மணி நேர குடிநீர் கட்டுப்பாடு சிறப்பு பிரிவு செயல்பட்டு வரு கிறது என்றார்.
இக்கூட்டத்தில் கோட்டத்தலைவர்கள் சீனி வாசன், லதா, கவுன்சிலர் கள் தமிழரசி, முத்துலட்சுமி, பாபு, மாநகரப் பொறியாளர் ராஜாமுகம்மது, செயற்பொறியாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
தொலைபேசி எண்கள்
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு 76395 11000, அரியமங்கலத்துக்கு 76395 22000, பொன்மலைக்கு 76395 33000, கோ அபிஷேகபுரத்துக்கு 76395 44000, அனைத்து பிரிவினரும் மாநகராட்சி மைய அலுவலக குடிநீர் கட்டுப்பாட்டு பிரிவு 76395 66000 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.