மாலை மலர் 28.07.2010
அயனாவரம்
, தியாகராயநகர் பகுதி சாலையோர வியாபாரிகளுக்கு 1185 கடைகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்குகிறார்
சென்னை
, ஜூலை.28- சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அயனாவரம் பாலவாயல் சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்காக கட்டப்பட்டு வரும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராயநகர் பாண்டிபஜாரில் ரூ
.4 கோடியே 30 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 758 சதுர அடியில் நடைபாதை வியாபாரிகளுக்காக தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதில்
3 மின் தூக்கிகள் மற்றும் 36 கழி வறைகளுடன் கூடிய 692 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. தரைத்தளத்தில் 170 கடைகளும், முதல்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளத்தில் தலா 174 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.அதேபோன்று
, அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக ரூபாய் ஒரு கோடியே 23 லட்சம் செலவில் 16 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் நடைபாதை வியாபாரிகளுக்கான கடைகள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் 363 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.ராயபுரத்தில் ரூபாய்
27 லட்சம் செலவில் 2615 சதுர அடி பரப்பளவில் நடைபாதை வியாபாரிகளுக்கான கடைகள் எம்.சி. சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் 133 கடைகள் கட்டப்படுகின்றன.ஆக மொத்தம் சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்காக
1185 கடைகள் ரூபாய் 5 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பணிகள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்– அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.தியாகராயநகரில் உஸ்மான் சாலை
, தியாகராயர் சாலை, பாண்டிபஜாரில் சிவப்பிரகாசம் சாலை, அயனாவரத்தில் பாலவாயல் சாலை, ராயபுரத்தில் மணியக்கார சத்திரத்தெருவில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் இல்லாதவாறு மாநகராட்சி அலுவலர்கள் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது வி
.எஸ்.பாபு, எம்.எல்.ஏ., மண்டலகுழுத்தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் குமரேசன், பகுதி செயலாளர் சதீஷ்குமார், சிட்கோ வாசு, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், பிரபு, ஜெயின், வீரமணி, கவுன்சிலர் காஞ்சி துரை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.