தினமணி 08.02.2010
1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்:ஆட்சியர்
சிவகங்கை,பிப்,7: சிவகங்கை மாவட்டத்தில் 1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.
7-2-2010 ஞாயிற்றுக்கிழமை போலியோ நோயை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் அமைத்து அரசு வழங்கி வருகிறது.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து துவக்கி வைத்துப் பேசியது: சிவகங்கை மாவட்டத்தில் 1,37,274 குழந்தைகளுக்கு 10-1-2010 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளன.
அதுபோல் இரண்டாம் கட்டமாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்ன 1192 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 6029 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வைப்ó பெற்றோர்கள் நன்கு உணர்ந்து தவறாமல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
முகாமில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரகுபதி, மாவட்ட பூச்சியயில் நிபுணர் ரமேஸ், மாவட்ட நலக்கல்வியாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.